கொள்ளு மிளகு பொடி எப்படி செய்வது

கொள்ளு மிளகு பொடி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கொள்ளு, மிளகு தலா அரை கப்,
காய்ந்த மிளகாய் – 5,
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள், சீரகம் தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு,
எண்ணெய் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

கொள்ளை நன்கு கழுவி, சுத்தம் செய்து ஈரம் போக உலர்த்தவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொள்ளு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறவிட்டு பொடி செய்யவும்.
பலன்: உடல் இளைக்க உதவும்.

Rates : 0

Loading…