கோங்கூரா தொக்கு எப்படி செய்வது

கோங்கூரா தொக்கு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கோங்கூரா (புளிச்சகீரை) ஒரு கட்டு,
புளி எலுமிச்சை அளவு, வெல்லம் சிறிய துண்டு, கடுகு (தாளிக்க) ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கவும்),
கடுகு (அரைக்க) ஒரு டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10,
எண்ணெய், உப்பு தேவையான அளவு.


செய்முறை:

புளிச்சகீரையை இலைகளாக கிள்ளி, கழுவித் துடைத்து துணியில் போட்டு ஒரு மணி நேரம் காயவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்தெடுக்கவும். புளிச்சக்கீரையை எண்ணெயில் வதக்கவும். இவற்றுடன் புளி (புளியை கொஞ்சம் கொதிநீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்தும் சேர்க்கலாம்), உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து வைத்த கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பலன்: உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து இதில் கிடைக்கும்.

Rates : 0

Loading…