சம்பா கோதுமை புலாவ் எப்படி செய்வது

சம்பா கோதுமை புலாவ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சம்பா கோதுமை ரவை – 2 கப்,
நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிய கேரட், குடமிளகாய், நறுக்கிய காலிஃப்ளவர், வேகவைத்த பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) ஒன்றரை கப்,
வெங்காயம் ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்),
பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தலா ஒன்று,
பிரியாணி மசாலா அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை:

ரவையுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, பொலபொலவென்று வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, உப்பு, பிரியாணி மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பொலபொலவென்று வெந்த ரவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
பலன்: இது… கார்போஹைட்ரேட், விட்டமின் சத்து நிறைந்தது.

Rates : 0

Loading…