சிவப்பு பூசணி துவையல் எப்படி செய்வது

சிவப்பு பூசணி துவையல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சிவப்பு பூசணி கால் கிலோ (தோல் சீவி, துருவி, வதக்கவும்),
தேங்காய் அரை மூடி (துருவிக்கொள்ளவும்),
மஞ்சள்தூள் சிறிதளவு,
புளி சிறிய எலுமிச்சை அளவு,
உப்பு தேவையான அளவு.

வறுத்துக்கொள்ள:

உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 10,
பூண்டு 2 பல்,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து… புளி, உப்பு, மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல், பூசணி துருவல் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து அரைத்து எடுக்கவும் (சிறிய துண்டு வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம். பூண்டு தேவை இல்லை என்றால் நீக்கிவிடவும்).

Rates : 0

Loading…