செட்டிநாட்டு சிக்கன் குழம்பு எப்படி செய்வது

செட்டிநாட்டு சிக்கன் குழம்பு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 2,
மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
தனியா தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, கறிவேப்பிலை – சிறிதளவு.


செய்முறை:

சிக்கனை நன்கு அலசிக் கழுவி, துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். குக்கரை அடுப்பில்வைத்து, சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடிவைக்கவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றைத் தாளித்து, குழம்பில் சேர்க்கவும். அப்படியே ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

இந்தக் குழம்பு மிகவும் கெட்டியாக இல்லாவிட்டாலும், மிக ருசியாக இருக்கும். செட்டிநாட்டுத் திருமணங்களில், காலை விருந்தில் இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்தக் குழம்புதான் சைடு டிஷ். செய்வது சுலபம்.

பலன்கள்:

புரதம், கொழுப்பு சத்துக்கள் சேரும். தசைகளுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சத்துக்கள் சேரும்.

Rates : 0

Loading…