சேமியா தேங்காய் இனிப்பு பொங்கல் எப்படி செய்வது

சேமியா தேங்காய் இனிப்பு பொங்கல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வடித்த சேமியா ஒரு கப்,
தேங்காய்த் துருவல் கால் கப்,
வெல்லப்பாகு ஒன்றரை கப்,
வேகவைத்த பாசிப்பருப்பு அரை கப்,
நெய் 150 கிராம்,
கேசரி பவுடர் ஒரு சிட்டிகை,
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம்,
ஏலக்காய்த்தூள் சிறிதளவு,
ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை.


செய்முறை:

சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துருவலை சிவக்க வறுக்கவும். அதனுடன் வெல்லப்பாகு. வெந்த சேமியா, வேகவைத்த பாசிப்பருப்பு, கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு நன்கு கிளறி, சற்று தளர இருக்கையில் இறக்கி… வறுத்த முந்திரி திராட்சை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, இளம் சூட்டில் பரிமாறவும்.

Rates : 0

Loading…