சேமியா மிளகு பொங்கல் எப்படி செய்வது

சேமியா மிளகு பொங்கல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வேகவைத்த சேமியா ஒரு கப்,
வேகவைத்த பாசிப்பருப்பு அரை கப்,
கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்),
நெய் 100 கிராம், மஞ்சள்தூள் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.

தாளிக்க:

முந்திரி 25 கிராம்,
மிளகு (பொடித்தது), சீரகம் தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு,
துருவிய இஞ்சி அரை டீஸ்பூன்.


செய்முறை:

வேகவைத்த பாசிபருப்பு, உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள், வேகவைத்த சேமியா ஆகியவற்றை வாணலியில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு மேலும் கிளறவும். பிறகு இறக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்க்கவும். புதினா, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

Rates : 0

Loading…