சொத்தைப் பல்லே வராம இருக்கணும்னா நீங்க என்ன பண்ணணும் தெரியுமா

தூக்கி வீசப்படும் சோள நாரில் இவ்வளவு நன்மைகளா

பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். ஆம் அந்த வலியை எப்படி இருக்கும் என்று பிறருக்குச் சொல்லிப் புரிய வைக்கவே முடியாது.

முதலில் சொத்தைப் பல் எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். வாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், பற்களின் எனாமல் அரிக்கப்பட்டு ஏற்படும் நிலைதான் சொத்தைப் பல். இதனால் பற்களின் உள் அடுக்கான டென்டின் தான் முதலில் பாதிக்கப்படும். நிறைய பேர் சொத்தைப் பற்களைப் போக்க பல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வார்கள்.

சொத்தைப் பற்கள் நாம் உண்ணும் பல உணவுகளாலும் பற்களைச் சரியாகப் பராமரிக்காததாலும் தான் ஏற்படுகிறது என்பது நம் எலலோருக்குமே தெரிந்தது தான். கனிமச்சத்துக்களின் குறைபாடு, கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின்களின் குறைபாடு, அளவுக்கு அதிகமான சர்க்கரை உணவுகளை உண்பது மற்றும் பைட்டிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதே சொத்தைப் பற்கள் உண்டாவதற்கான அடிப்படைக் காரணங்கள்.

சொத்தைப் பற்கள் இருந்தால், சர்க்கரை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளித்து, எச்சிலை அமிலமாக்கி, பற்களை மேன்மேலும் சொத்தையாக்கும். எனவே சர்க்கரை உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்து விட வேண்டும்.

சொத்தைப் பற்களை எதிர்த்துப் போராட, கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக, பச்சை இலைக் காய்கறிகள், கேரட், அவகேடோ, தேங்காய் எண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், பற்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

பைட்டிக் அமிலம் தானியங்கள், வேர்க்கடலை, மைதா, சோளம், கோதுமை, பருப்பு வகைகள் போன்றவற்றில் அதிக அளவில் உள்ளது. இந்த உணவுகளை சொத்தைப் பல் இருக்கும்போது சாப்பிட்டால் அது மேலும் அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.
ஆயில் புல்லிங்

தினமும் காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, 20 நிமிடம் கொப்பளித்து துப்பிய பின், பல் துலக்க வேண்டும். இப்படி தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், சொத்தைப் பற்கள், ஈறு நோய்கள் போன்றவை தடுக்கப்படுவதோடு, தலைவலி குறையும்.

ப்ளூரைடு அதிகம் உள்ள டூத்பேஸ்டுகளைத் தவிர்க்க வேண்டும். அதனால் பேஸ்ட் வாங்கும்போதே அதை கவனித்து வாங்க வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உண்டு. கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் கலந்த டூத் பேஸ்ட்டுகளை விட மிகக் குறைந்த செலவில் சில இயற்கைப் பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே டூத்பேஸ்ட் தயார் செய்து பயன்படுத்தலாம். இந்த டூத்பேஸ்ட்டை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பல் வலி குறைவதோடு மிக விரைவிலேயே சொத்தைப் பல்லில் இருந்து மற்ற பற்களைப் பாதுகாக்க முடியும்.

Rates : 0

Loading…