டேட்ஸ் கேக் எப்படி செய்வது

டேட்ஸ் கேக் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

மைதா இரண்டரை கப்,
வெண்ணெய் ஒன்றே கால் கப்,
பால் ஒன்றரை கப்,
கண்டன்ஸ்டு மில்க்- 400 மில்லி,
பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் அரை கப்,
ஆப்ப சோடா அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்து, மீதமுள்ள மைதாவுடன் ஆப்ப சோடா, பேக்கிங் பவுடரை சேர்த்து சலிக்கவும் சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். பேரீச்சம்பழத்துடன் 2 டீஸ்பூன் மைதா சேர்த்துப் பிசிறி வைக்கவும்.

குழைத்த சர்க்கரை வெண்ணெய் கலவையில் கண்டன்ஸ்டு மில்க், பால், மைதா, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் பேரீச்சம்பழக் கலவை சேர்த்து கலக்கவும். இதை… வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு டிரேயில் ஊற்றி, ‘அவன்’ல் 180 டிகிரி சென்டிகிரேடில் ‘பேக்’ செய்யவும்.
இதை வாணலியிலும் செய்யலாம். வாணலியில் மணல் போட்டு சூடு படுத்தி அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து அரை மணி நேரம் மூடி வைத்து ‘பேக்’ செய்யவும்.
பலன்: இரும்புச் சத்து அதிகரிக்கும்.

Rates : 0

Loading…