தக்காளிக்காய் அரைத்து விட்ட சாம்பார் எப்படி செய்வது

தக்காளிக்காய் அரைத்து விட்ட சாம்பார் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தேவையானவை: தக்காளிக்காய் – 150 கிராம்,
சின்ன வெங்காயம்- 10,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
வேகவைத்த துவரம்பருப்பு கால் கப்,
புளி கொட்டைப்பாக்கு அளவு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க: கடலைப் பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்,
தனியா – 4 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
தேங்காய்த் துருவல்- 4 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் சிறிதளவு.


செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும். புளியை நீர் விட்டு கரைத்து (ஒரு டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, சின்ன வெங்காயத்தை வதக்கி கொதிக்கும் புளிக்கரைசலில் ஊற்றவும். வெங்காயம் பாதியளவு வெந்ததும், நீளவாக்கில் நறுக்கிய தக்காளிக்காயை வதக்கி சேர்க்கவும். தக்காளிக்காய் விரைவிலேயே வெந்துவிடும். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து… கொத்தமல்லித்தழை தூவவும்.
குறிப்பு: தக்காளிக்காயில் புளிப்பு உள்ளதால் புளியை கொஞ்சமாகச் சேர்த்தால் போதும்.

Rates : 0

Loading…