தக்காளிக்காய் கூட்டு எப்படி செய்வது

தக்காளிக்காய் கூட்டு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தக்காளிக்காய் கால் கிலோ,
பயத்தம்பருப்பு 6 -டேபிள் ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
உப்பு தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:

தேங்காய்த் துருவல் கால் கப்,
சீரகம் ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை 5 இதழ்கள்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ஒன்று,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
கடுகு ஒரு டீஸ்பூன்..


செய்முறை:

பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தக்காளிக்காயை நறுக்கிப் போட்டு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு வேகவிடவும். பின்னர், வேகவைத்த பருப்புகளை இதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்த விழுதை சேர்த்து, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

Rates : 0

Loading…