தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது

தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி ஒரு கிலோ,
பூண்டு- 100 கிராம்,
காய்ந்த மிளகாய்- 15,
மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்,
துருவிய வெல்லம்- 3 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 150 கிராம்,
கடுகு- 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு தேவைக்கேற்ப,


செய்முறை:

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம், கடுகை தனித்தனியாக வறுத்து, இறுதியில் உப்பையும் வறுக்கவும். மிக்ஸியில் இவற்றைப் பொடியாக்கவும். அடி கனமான வாணலியில் 100 கிராம் எண்ணெய் விட்டு, தோலுரித்த பூண்டை முழுதாக வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து (நீர் விடாமல்) வதக்கி, மஞ்சள்தூள், வெல்லம் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து சுருண்டு வரும்போது பொடித்த பொடியைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் மீதியுள்ள 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

Rates : 0

Loading…