தக்காளி காய் கனி சப்ஜி எப்படி செய்வது

தக்காளி காய் கனி சப்ஜி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தக்காளிக்காய்- 4,
நாட்டுத் தக்காளிப் பழம்- 2,
பெரிய வெங்காயம் ஒன்று,
ஊற வைத்து, வேகவைத்த கறுப்புக் கொண்டைக்கடலை கால் கப்,
பூண்டு- 3 பல்,
மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
கொத்தமல்லித்தழை சிறிதளவு,
கரம்மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்,
எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:
பச்சை மிளகாய் – 2,
தேங்காய்த் துருவல் அரை கப்,
இஞ்சி ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்),
பொட்டுக்கடலை -2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

அரைக்க கொடுத்த வற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி… நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய தக்காளிக்காய், தக்காளிப் பழம், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு வேகவிடவும். பாதி வெந்ததும், கொண்டைக்கடலையை சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி கரம்மசாலா சேர்த்து கலந்துவிடவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி, நாண், பரோட்டா முதலியவற்றுக்கு சிறந்த சைட்டிஷ்.

Rates : 0

Loading…