தக்காளி காரக்குழம்பு எப்படி செய்வது

தக்காளி காரக்குழம்பு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பெங்களூர் தக்காளி – 3,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 5 பல்,
மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன்,
புளி நெல்லிக்காய் அளவு,
மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
துருவிய வெல்லம் ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க:
எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு,
காய்ந்த மிளகாய் ஒன்று,
உதிர்த்த வெங்காய வடகம்- 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

புளியைக் கரைத்து (2 டம்ளர் வருமாறு), வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை வதக்கி, மணத்தக்காளி வற்றல் சேர்த்து வதக்கி, கொதிக்கும் கரைசலில் சேர்க்கவும். வெல்லமும் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து குழம்பு பதம் வந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், கொத்த மல்லித்தழை சேர்க்கலாம்.

Rates : 0

Loading…