தக்காளி கொத்சு எப்படி செய்வது

தக்காளி கொத்சு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தக்காளி- 200 கிராம்,
பச்சை மிளகாய்- 3,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
புளி கொட்டைப்பாக்கு அளவு,
அரிசி மாவு ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம்- 50 கிராம்,
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ஒன்று, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு,
எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப,


செய்முறை:

புளியை நீர் விட்டு கரைத்து (இரு டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். எல்லாமாக வெந்து சேர்ந்து வரும்போது, அரிசி மாவில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

Rates : 0

Loading…