தக்காளி சேமியா கிச்சடி எப்படி செய்வது

தக்காளி சேமியா கிச்சடி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பெங்களூர் தக்காளி- 2,
சேமியா- 2 கப்,
பச்சை மிளகாய்- 2,
கடுகு ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் ஒன்று,
கேரட் துருவல்- 3 டேபிள்ஸ்பூன்,
உடைந்த முந்திரித் துண்டுகள்- 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சிறிதளவு,
எண்ணெய்- 5 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு… கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட் துருவல் சேர்த்து மேலும் வதக்கி, சேமியாவை சேர்த்து லேசாக வறுத்து, 2 கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதியளவு வெந்ததும் அரைத்த தக்காளி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து, நன்றாகக் கிளறிவிடவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
இந்த தக்காளி சேமியா கிச்சடி புளிப்பும், காரமும் சேர்ந்து அசத்தலான சுவையில் இருக்கும்.

Rates : 0

Loading…