தக்காளி தோசை எப்படி செய்வது

தக்காளி தோசை எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி – 3,
புழுங்கல் அரிசி ஒரு கப்,
பச்சரிசி கால் கப்,
உளுத்தம்பருப்பு- 3 டேபிள்ஸ்பூன்,
சீரகம் ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
காய்ந்த மிளகாய் – 4,
எண்ணெய் -5 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீர் விட்டு அரைக்கவும். பாதியளவு அரைபட்டதும் நறுக்கிய தக்காளித் துண்டுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நைஸாக அரைத்து, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவை தவாவில் தோசையாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
சிவந்த நிறத்தில் புளிப்பும், காரமுமாக வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த தோசைக்குத் தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி ஏற்றது.

Rates : 0

Loading…