தக்காளி பாத் எப்படி செய்வது

தக்காளி பாத் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தக்காளி – 200 கிராம்,
பெரிய வெங்காயம்- 2,
பச்சை மிளகாய்- 3,
பூண்டு- 3 பல், இஞ்சி சிறிய துண்டு (தோல் சீவவும்),
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
நறுக்கிய புதினா, நறுக்கிய கொத்தமல்லித்தழை தலா- 3 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்,
உதிர் உதிராக வடித்த சாதம் 2 கப்,
எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பூண்டு, இஞ்சியை நசுக்கிச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து வெந்து வந்ததும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்த்து இறக்கிவிடவும். உதிராக வடித்த சாதத்தை அதில் சேர்த்துக் கிளறினால்… தக்காளி பாத் தயார்.

Rates : 0

Loading…