தக்காளி பூண்டு ரசம் எப்படி செய்வது

தக்காளி பூண்டு ரசம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

தக்காளி – 2,
பூண்டு- 4 பல்,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
ரசப்பொடி ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி சிறிய நெல்லிக்காய் அளவு,
பச்சை மிளகாய் ஒன்று,
வேகவைத்த துவரம்பருப்பு -3 டேபிள்ஸ்பூன்,
கடுகு சிறிதளவு,
காய்ந்த மிளகாய் ஒன்று,
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு,
எண்ணெய் 2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

புளியைக் கரைத்து (ஒன்றரை டம்ளர் வருமாறு), வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறி, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, ரசப்பொடியை போட்டு ஒரு புரட்டு புரட்டி, கொதிக்கும் புளிக் கரைசலில் ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் வேகவைத்த துவரம்பருப்பை அரை டம்ளர் நீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து இரண்டு கொதி வந்ததும், மீதியுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். பின்னர் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

Rates : 0

Loading…