தக்காளி பூரி எப்படி செய்வது

தக்காளி பூரி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு ஒரு கப்,
கெட்டியான நாட்டுத் தக்காளி- 3,
பச்சை மிளகாய் – 2,
ஓமம் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு.


செய்முறை:

தக்காளியையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து உப்பு, ஓமம் சேர்க்கவும். கோதுமை மாவில் நீருக்குப் பதிலாக இதனை ஊற்றிப் பிசையவும். 2 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெயை இந்த மாவில் ஊற்றிப் பிசைந்து, மாவை பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கலர்ஃபுல்லான இந்த பூரி குழந்தைகளை மிகவும் கவரும்.

Rates : 0

Loading…