தக்காளி ராய்த்தா எப்படி செய்வது

தக்காளி ராய்த்தா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பெங்களூர் தக்காளி- 2,
கெட்டித் தயிர் ஒரு கப்,
பெரிய வெங்காயம் பாதியளவு,
தேங்காய்த் துருவல் கால் கப்,
பச்சை மிளகாய் ஒன்று,
நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப,
சர்க்கரை ஒரு சிட்டிகை.


செய்முறை:

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அகலமான கிண்ணத்தில் தயிரை ஊற்றி… உப்பு, சர்க்கரை, அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிடவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இந்த ராய்த்தா… பிரியாணி, புலாவ், சப்பாத்தி போன்றவற்றுக்கு சிறந்த சைட்டிஷ்.

Rates : 0

Loading…