தக்காளி வற்றல் எப்படி செய்வது

தக்காளி வற்றல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

நாட்டுத்தக்காளி ஒரு கிலோ,
பெரிய ஜவ்வரிசி- 100 கிராம்,
பச்சை மிளகாய்- 5,
சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்,
கல் உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

ஜவ்வரிசியை முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை ஒரு லிட்டர் தண்ணீரை சூடு செய்து அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியை முழுதாகப் போட்டு கொதித்த நீரை ஊற்றி 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, தக்காளி தோலை கைகளால் உரித்து எடுத்துவிடவும். தக்காளி, பச்சை மிளகாய் இரண்டையும் நீர்விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான, பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி…

உப்பு, சீரகம் சேர்த்து முதல் நாள் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும். பாதி வெந்ததும் அரைத்த தக்காளி கலவையையும் சேர்த்து, எல்லாமாக சேர்ந்து கண்ணாடி மாதிரி பளபளவென்று வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி விரும்பிய வடிவங்களில் இந்தக் கலவையை கரண்டியால் ஊற்றி, வெயிலில் காயவைக்கவும். அன்று மாலையே இந்த வற்றலை மறுபுறம் புரட்டிவிடவும். 4, 5 நாட்கள் இந்த வற்றலை காயவைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
அதிக அளவில் தக்காளி கிடைக்கும்போது இதனை தயாரித்து வைத்துக் கொண்டால், ஆண்டு முழு வதும் பயன்படுத்தலாம்.

Rates : 0

Loading…