தண்ணீர் விரதத்தின் நன்மைகள்

தண்ணீர் விரதத்தின் நன்மைகள்

தண்ணீர் விரதம் என்பது எந்த உணவுகளையும் சாப்பிடாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பதாகும். இந்த தண்ணீர் விரதத்தின் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

தண்ணீர் விரதம் மேற்கொள்ளும் போது நம் உடலில் இருந்து நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படும்.
நம் உடலில் படியும் கொழுப்புகள், சேதமடைந்த இறந்த திசுக்கள் மற்றும் கழிவுகள் ஆகிய அனைத்தும் வெளியேறிவிடும்.
தழும்பு திசுக்கள், கட்டிகள், ரத்த கட்டிகள், பழைய காயங்கள் போன்றவை எரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படும் அல்லது கழிவுகளாக வெளியேற்றப்படும்.
செரிமானம், சீரான ரத்த ஓட்டம், உறிஞ்சும் தன்மை, கழிவு வெளியேற்றம் போன்ற அனைத்து இயக்கங்களும் எளிதாகும்.
பருக்கள், கட்டுகள், தழும்புகள், வறண்ட சருமம், சுருக்கம் போன்ற சருமப் பிரச்சனையை தடுத்து, வயது முதிர்வை தாமதப்படுத்தும்.
சரும அணுக்களில் நச்சுக்கள் இல்லாததால் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து, சருமம் எப்போதும் பொலிவாக இருக்கும்.
குறிப்பு

தண்ணீர் விரதத்தை பின்பற்றும் போது நம் உடலில் பசி மற்றும் சோர்வினால் பல அசௌகரியங்கள் உண்டாகும்.

முதல் ஓரிரு நாட்கள் பசியின் தாக்கத்தால் தலைவலி ஏற்படலாம். 2 நாட்களுக்கு பின் உடலின் அசௌகரியங்கள் குறையும்.

தண்ணீர் விரதத்தை ஒருநாள் அல்லது 3 நாட்களுக்கு மேல் மேற்கொள்ள வேண்டாம்.

Rates : 0

Loading…