தினமும் ஏன் கட்டாயம் பூண்டு சாப்பிடணும்னு தெரியுமா

தினமும் ஏன் கட்டாயம் பூண்டு சாப்பிடணும்னு தெரியுமா

பூண்டு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் என்பதும் நோய் எதிர்பு்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதும் நமக்குத் தெரியும்.

பூண்டில் உள்ள ஆன்டி- ஆக்சிடண்ட் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதுமட்டுமல்லாது, பூண்டில் பல்வேறு மருத்துவ குண நலன்கள் உள்ளன. அதனால் அன்றாட உணவில் கட்டாயம் பூண்டு சேர்த்துக் கொள்வது நல்லது.

பூண்டு தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன பிரச்னைகள் தரும்?… என்னென்ன நன்மைகள் உண்டாகும்?…

எலும்புகளை உறுதிப்படுத்தும்
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மறதி நோய் உண்டாகும் வாய்ப்புகளைக் குறைக்கும்
இதில் மிக அதிக அளவில் வைட்டமின் சி, மாங்கனீசு நிறைந்துள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
குடலில் உண்டாகும் நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கிருமிகளை அழிக்கும்.
பற்களை உறுதியாக்கும். பல் வலியைப் போக்கும்.
வாயுத்தொல்லையை சரிசெய்யும்.
இன்னும் ஏராளமான நன்மைகள் உள்ளதால் தினமும் உணவில் பூண்டை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Rates : 0

Loading…