தினமும் செரிமான பிரச்சனையால் இரவில் தூங்க முடியவில்லையா

தினமும் செரிமான பிரச்சனையால் இரவில் தூங்க முடியவில்லையா

உணவு சுவையாக உள்ளது என்று வயிறு நிறைய சாப்பிட்டு, செரிமான பிரச்சனை அல்லது வயிற்று உப்புசத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா?

இதனால் சரியாக தூங்க கூட முடியவில்லையா? இதுவரை செரிமான பிரச்சனை இருக்கும் போது, சோம்பு அல்லது துளசியை வாயில் போட்டு மென்று சாப்பிடுவீர்கள்.

ஆனால் அதையும் விட சக்தி வாய்ந்த சில உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதில் இருந்து விடுபடலாம்.

பப்பாளிக் காய்
பப்பாளிக் காயை கடுகு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பொரியல் போன்று செய்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாப்பைன் மற்றும் இதர நொதிகள் குடலியக்கத்தை சீராக்கி, குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

இஞ்சி
தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வந்தால், அதில் உள்ள காரத்தன்மை, செரிமானம் சீராக நடைபெற உதவும். இதற்கு இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர உட்பொருட்கள் தான் முக்கிய காரணம்.

ஓமம்
ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குடித்து வந்தால், வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகள் நீங்கி, வயிற்றின் ஆரோக்கியமும் மேம்படும்.

தயிர்
தயிரில் உள்ள நொதிகள் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள், செரிமானத்தை மேம்படுத்தும். எனவே செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அன்றாடம் தயிரை உண்ணும் உணவில் சேர்த்து வாருங்கள்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டு வந்தால், செரிமானம் மேம்படும். மேலும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்களை வெளியேற்றி, உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்

Rates : 0

Loading…