நாட்டுக்காய் கதம்ப சாம்பார் எப்படி செய்வது

நாட்டுக்காய் கதம்ப சாம்பார் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கத்திரிக்காய், வாழைக்காய் வெள்ளைப் பூசணி துண்டுகள் (சேர்த்து) 2 கப்,
தக்காளி 2 (நறுக்கவும்),
புளிக்கரைசல் கால் கப்,
வேகவைத்த துவரம்பருப்பு 100 கிராம் (மசிக்கவும்),
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
சாம்பார் பொடி 3 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் 100 கிராம் (நறுக்கவும்),
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

தாளிக்க:

காய்ந்த மிளகாய் 2, கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

புளிக்கரைசலில் மேலும் அரை கப் நீர் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்களை சேர்த்து வேகவிடவும். சின்ன வெங்காயம், தக்காளியை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி, வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்க்கவும். சாம்பார் பொடியையும் சேர்க்கவும். மசித்த துவரம்பருப்பில் சிறிதளவு நீர் விட்டு விளாவி இதில் சேர்த்துக் கொதிக்க விடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, இதனுடன் சேர்த்து இறக்கி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.

Rates : 0

Loading…