நெஞ்சு சளி பிரச்னைக்கு சிறந்த தீர்வு இதுதான்

நெஞ்சு சளி பிரச்னைக்கு சிறந்த தீர்வு இதுதான்

சளி என்பது வெறுமனே சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. அது அப்படியே உடலுக்குள் தங்கிவிட்டால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கொண்டுபோய் விட்டுவிடும்.

பின் உடலில் தேங்கும் சளியை வெளியே எடுப்பதற்கு கடினமான மருத்துவ முறைகளைக் கையாள வேண்டி வரும். அதனால் ஆரம்ப காலத்திலேயே சளியை வெளியேற்றிவிட வேண்டும்.

இவ்வாறு நாள்பட்ட சளியையும் வெளியேற்றும் அற்புத மூலிகை ஒன்றுண்டு. இதை வளர்ப்பது மிக எளிது. சாதாரணமாக வீடுகளில் தொட்டியில் வளர்க்கலாம். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இந்த அற்புத மூலிகையின் பெயர் கற்பூரவள்ளி. இதற்கு வேறு பெயர் ஓம வள்ளி என்பதாகும்.

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லிதழை – 10 இலைகள்
தேன் – சுவைக்கு
வெற்றிலை – 1
மிளகு – 5 முதல் 10 வரை
துளசி – 10 இலைகள்
நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடு நரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

நெய்யை வாணலியில் விட்டு துண்டுகளாக்கப்பட்ட மூன்று இலைகளையும், மிளகையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதங்கிய கலவையை தண்ணீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும்.

அதனுடன் தேவைப்படும் அளவு தேன் சேர்த்து சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம். ஆனால் பெரியவர்கள் சாப்பிடுவது போன்று அப்படியே கொடுக்காமல் துவையலில் தேன் சேர்த்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தையின் நெஞ்சில் கட்டிய சளியும், கோழையும் சுத்தமாக கரைந்து வெளியேறி விடும்.

Rates : 0

Loading…