பச்சை மொச்சை காரக்குழம்பு எப்படி செய்வது

பச்சை மொச்சை காரக்குழம்பு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வேகவைத்த பச்சை மொச்சை 200 கிராம்,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
தக்காளி 4,
சின்ன வெங்காயம் கால் கிலோ,
பச்சை மிளகாய் 4,
புளிக்கரைசல் அரை கப்,
உப்பு தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க:

பூண்டு 4 பல், சோம்பு அரை டீஸ்பூன், தனியா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் கால் கப், மிளகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு.

தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.


செய்முறை:

கடாய் அல்லது மண்சட்டியில் எண் ணெய் விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, விழுதாக அரைக்கவும். மீண்டும் கடாய் (அ) மண் சட்டியை சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இதில் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கொஞ்சம் கொதித்து வருகையில் வேகவைத்த மொச்சையை சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது.

Rates : 0

Loading…