பப்பாளி கேசரி எப்படி செய்வது

பப்பாளி கேசரி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ரவை ஒன்றரை கப்,
நறுக்கிய பப்பாளித் துண்டுகள் ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு கப்,
சர்க்கரை – 2 கப்,
முந்திரிப் பருப்பு, உலர்திராட்சை (சேர்த்து) – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை.


செய்முறை:

பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அதனுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். வெறும் வாணலியில் ரவையை வறுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரிப் பருப்பு, உலர்திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் அதே வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் ரவை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி வேகவிடவும். பின்னர் அரைத்த பப்பாளி விழுது, சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…