பழப்புட்டு எப்படி செய்வது

பழப்புட்டு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

புட்டு மாவு – 200 கிராம்,
நேந்திரன் வாழைப்பழம் ஒன்று,
பலாச்சுளை – 10,
தேங்காய்த் துருவல் ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் சிறிதளவு,
நெய் – 50 மில்லி,
உலர் திராட்சை சிறிதளவு.

செய்முறை:

வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கி புட்டு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் உலர் திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, நெய் சேர்த்துப் பிசிறி, புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.

Rates : 0

Loading…