பாதாமை அதிகளவு சாப்பிட்டால் எவ்வளவு தீமை தெரியுமா

பாதாமை அதிகளவு சாப்பிட்டால் எவ்வளவு தீமை தெரியுமா

பாதாம் நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நமக்கு உற்ற நண்பன் தான். பாதாமில் அதிகளவு விட்டமின் ஏ உள்ளது. இது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதன் சுவையில் மயங்கி பாதாமை மிக அதிகளவு சாப்பிட்டால், அது எதிர்மறை விளைவுகளை தான் தரும். ஆம் பாதமை அதிகளவு சாப்பிட்டால் 5 எதிர்மறை விளைவுகள் உண்டாகும். அவை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்

நீங்கள் அதிகளவு பாதாமை சாப்பிட்டால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிறு சரி இல்லாமல் போவது ஆகிய பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு காரணம், பாதாமில் உள்ள அதிகளவு நார்ச்சத்து தான். ஆனால் அதிகளவு நார்ச்சத்தை உங்களது உடல் எடுத்துக்கொள்ளாது. நீங்கள் அதிகளவு நார்ச்சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டால், அதிகளவு நீரையும் குடிக்க வேண்டியது அவசியம். அதற்கு நீங்கள் பாதாமை அதிக அளவு சாப்பிடாமல் இருப்பதே சிறந்ததாக இருக்கும்.

100 கிராம் அதாவது 1 கப் பாதாமில் 25mg விட்டமின் ஈ இருக்கும். உங்களது தினசரி பாதாமின் தேவை என்னவென்றால், 15mg தான். அதுமட்டுமின்றி ஒரே நாளில் நீங்கள் முட்டை, முழு தானிய உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டால் உங்களது உடலுக்கு தேவைக்கு மீறி விட்டமின் ஈ கிடைத்துவிடுகிறது. இது உங்களுக்கு வயிற்றுப்போக்கு, மங்கலான பார்வை மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம்.

பாதாமில் அதிகளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. 100 கிராம் பாதாம் உங்களுக்கு 50 கிராம் கொழுப்பை தருகிறது. ஆனால் அளவாக பாதாம் சாப்பிடுவது இருதயத்திற்கு மிகவும் நல்லது. அதிகமாக பாதாம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிச்செய்யும்.

உப்பு மற்றும் காரம் சேர்க்கப்பட்டு சாப்பிடும் பாதாம் நல்லது என்றாலும் கூட, அவற்றை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும். ஏனெனில் இதில் ஹைட்ரோசயனிக் அமிலம் உள்ளது. எனவே அதிகமாக சாப்பிடும் போது, இது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும், முக்கியமாக கர்ப்பமாக உள்ள பெண்கள் இதனை அதிகமாக சாப்பிட கூடாது.

உணவுத்துறையின் ஆய்வின் படி ஒரு நாளைக்கு முக்கால் கப் பாதாம் அதாவது 40 கிராமிற்கு மேல் கண்டிப்பாக பாதாம் சாப்பிட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rates : 0

Loading…