பீட்ரூட் சப்பாத்தி எப்படி செய்வது

பீட்ரூட் சப்பாத்தி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்,
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
பீட்ரூட் ஒன்று (மீடியம் சைஸ்),
பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 3 பல், எண் ணெய்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

பீட்ரூட், பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள், பூண்டு, உப்பு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். கோதுமை மாவுடன் வடிகட்டிய பீட்ரூட் சாறு, நெய், உப்பு சேர்த்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து) நன்கு பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டவும். அடுப் பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

பலன்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

Rates : 0

Loading…