புதினா மிளகு துவையல் எப்படி செய்வது

புதினா மிளகு துவையல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ஆய்ந்து, அலசிய புதினா ஒரு கப்,
மிளகு 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2,
தோலுடன் கூடிய உடைத்த கறுப்பு உளுந்து 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு 2 பல்,
புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி… உப்பு, புளி தவிர மற்ற பொருட்களை சிவக்க வறுக்கவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
இதை கஞ்சி, சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், அசத்தலான சுவையில் இருக்கும்.

Rates : 0

Loading…