பூண்டு மிளகு சீரக ரசம் எப்படி செய்வது

பூண்டு மிளகு சீரக ரசம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பூண்டு 6 பல் (தோல் உரித்தது),
புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு,
கடுகு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு,
நெய் 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். புளியை நீரில் கரைத்து, அதில் அரைத்ததை சேர்த்துக் கலந்து உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் கடுகு, பெருங் காயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்து குழைவாக வேகவைத்து, இந்த ரசத்தை ஊற்றிக் கரைத்து குடித்தால்… உடல் வலி, சோர்வு நீங்கும்.

Rates : 0

Loading…