பொன்னாங்கண்ணி கீரை பொரியல் எப்படி செய்வது

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணி கீரை ஒரு கட்டு (ஆய்ந்து பொடியாக நறுக்கவும்),
தேங்காய்த் துருவல் கால் கப்,
வேகவைத்த துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து… கீரை, உப்பு சேர்த்து கொஞ்சமாக நீர் தெளித்துக் கிளறி மூடிவைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). வெந்ததும் தேங்காய்த் துருவல், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பலன்: மேனியை பொன் போல மினுமினுப்பாக ஆக்கும். கண் நரம்புகள் பலப்படும்

Rates : 0

Loading…