மாதுளை தயிர் பச்சடி எப்படி செய்வது

மாதுளை தயிர் பச்சடி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

புளிக்காத கெட்டித் தயிர் ஒரு கப்,
மாதுளை முத்துக்கள் ஒரு கப்,
வேகவைத்த பச்சைப் பட்டாணி ஒரு டேபிள்ஸ்பூன்,
வாழைத்தண்டு சிறிய துண்டு (பொடியாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்),
கடுகு அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் கால் கப்,
பச்சை மிளகாய் -2,
முந்திரி -6,
எண்ணெய் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

பச்சை மிளகாய், முந்திரியை விழுதாக அரைத்து, கெட்டியான தயிரில் சேர்க்கவும். கடுகு, எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையையும் இதனுடன் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்
பலன்: இது ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

Rates : 0

Loading…