மாம்பழ அல்வா எப்படி செய்வது

மாம்பழ அல்வா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

மாம்பழக் கூழ் ஒரு கப்,
ரவை, சர்க்கரை, நெய் தலா அரை கப்,
பொடியாக நறுக்கிய முந்திரித் துண்டுகள் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்,
தண்ணீர் ஒரு கப்.


செய்முறை:

அடுப்பில் கெட்டியான வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு சூடாக்கி, ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் பாகு காய்ச்ச வும். வறுத்த ரவையை அதில் சேர்த்து வேகும் வரை கிளறி, மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி வேகவிட்டு, நெய் பிரிந்து வரும்போது இறக்கி, முந்திரி சேர்த்துப் பரிமாறவும் (கேக் போல துண்டுகள் போட்டும் பரிமாறலாம்).

Rates : 0

Loading…