மிக்ஸ்டு வெஜ் கட்லெட் எப்படி செய்வது

மிக்ஸ்டு வெஜ் கட்லெட் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) ஒரு கப்,
ரஸ்க் தூள் 6 டேபிள்ஸ்பூன்,
பீட்ரூட் 2, ஊறவைத்த பச்சைப் பட்டாணி அரை கப்,
ஒன்று, பச்சை மிளகாய் 3,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை:

பீட்ரூட்டைத் தோல் சீவி சிறிய கட்டங்களாக நறுக்கி, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறவைத்த பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் வேகவைத்த பீட்ரூட் சேர்த்து வதக்கி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். ஆறியதும் கெட்டியான வட்டமாக தயார் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைக்கவும். கார்ன்ஃப்ளாருடன் உப்பு, நீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, வட்டமாக தயார் செய்து வைத்தவற்றை தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Rates : 0

Loading…