மினிட்ஸ் தக்காளி சட்னி எப்படி செய்வது

மினிட்ஸ் தக்காளி சட்னி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பெங்களூர் தக்காளி – 4,
சாம்பார் பொடி-2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
நறுக்கிய கொத்த மல்லித்தழை- 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் சிட்டிகை,
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு.


செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கி… உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, (நீர் விடாமல்) அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இதை இட்லி, பொங்கல், உப்புமா போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

Rates : 0

Loading…