லிச்சி ஃப்ரூட் பாசந்தி எப்படி செய்வது

லிச்சி ஃப்ரூட் பாசந்தி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

லிச்சி பழம் ஒரு கப் (தோல் உரித்து, கொட்டை நீக்கியது),
பால் ஒரு லிட்டர், சர்க்கரை கால் கப்,
குங்குமப்பூ சிறிதளவு, நெய் ஒரு டீஸ்பூன்,
பாதாம் – 6 (சீவவும்).


செய்முறை:

கெட்டியான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி, கால் லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்சவும். அத்துடன் லிச்சி பழத்தை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு… பிறகு, சர்க்கரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சீவிய பாதாம் பருப்பு, குங்குமப்பூ தூவி, ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

Rates : 0

Loading…