வாயுத்தொல்லையால் அவதிப்படறீங்களா இத குடிங்க உடனே சரியாகிடும்

வாயுத்தொல்லையால் அவதிப்படறீங்களா இத குடிங்க உடனே சரியாகிடும்

வாயுத் தொல்லை பிரச்சினை இல்லாத ஆட்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும், தர்மசங்கடத்துல தரும் பிரச்சினை இது.

சமைச்ச உணவு சாப்பிடறப்ப கூடவே பச்சைக் காய்கறி, பழங்களைச் சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு, சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. காய்கறி, பழங்களில் நார்ச்சத்துகள் அதிகம் என்பதால் அது சமைச்ச உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிமானமாகி புளித்து, வாயுவை உண்டாக்கும்.

அதேபோல், சில பேர் அவசரம் அவசரமா உணவை மென்று சாப்பிடாமல் விழுங்கிவிடுவார்கள். அப்போது காற்றையும் சேர்த்து விழுங்குவதும் கூட வாயுவுக்கான காரணமாக அமையும். மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டாலே வாயுத்தொல்லை இருக்காது.

வாயு தொல்லை, வயிற்றுக்கோளாறு இருப்பவர்கள் இந்த பூண்டுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் குணமடையும்.

தேவையான பொருட்கள் :

பூண்டு – 3 பல்,
எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன்,
தேன் – சிறிதளவு,
தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை :

பூண்டை நன்றாக தட்டி வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் பூண்டை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து பூண்டு சாறு இறங்கியதும் இறக்கி வடிகட்டவும். வடிகட்டிய பூண்டு சாறுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து பருகலாம்.

இதை வாரத்துக்கு இரண்டு முறையோ அல்லது தினமும் இரவு தூங்குவதற்க முன்பாக குடித்து வந்தால் வாயுத்தொல்லையில் இருந்து எளிதாக வெளிவர முடியும்.

Rates : 0

Loading…