வாயுத்தொல்லை 4 பேர் முன்னாடி சங்கடத்தை உண்டாக்குதா இத ட்ரை பண்ணுங்க

வாயுத்தொல்லை 4 பேர் முன்னாடி சங்கடத்தை உண்டாக்குதா இத ட்ரை பண்ணுங்க

வாய்வுத் தொல்லை பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைதான். செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது.

வேலைப்பளு, மன அழுத்தம் , நேரம் தவறி சாப்பிடுவது இவைகள்தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். அத்தகைய நிலை உண்டாகும்போது போது இடத்தில் பலரும் நெளிவதுண்டு. இதனால் வயிறு பிடித்துக் கொண்டு அந்த நிமிடமாவது அவஸ்தை கொள்வார்கள்.

அந்த மாதிரி தர்மசங்கடங்கள் வராமல் இருக்கவும், ஜீரண உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் என்ன மாதிரியான வீட்டு வைத்தியங்களைச் செய்யலாம்…

சூரிய காந்தி இலைகள் முழுமையான ஜீரண சக்தியை தூண்டுவதால் வாய்வு உருவாவதை தடுக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அந்த மாதிரி சமயங்களில் சூரிய காந்தி இலைகளை உண்ணலாம்.

வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். பப்பாளி வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாகத் தூண்டுகிறது. இதனால் வாய்வு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது.

வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் யோகர்ட் என்று சொல்லப்படும் தயிரைச் சாப்பிடலாம்.

சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச்சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில்போட்டு மென்று தின்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.

சீமை சாமந்தி டீ பேக் இப்போது எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். அதனை வாங்கி நீரில் தேநீர் தயாரித்து குடித்தால் வாய்வுத் தொல்லை வராமலும் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.

வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப்பழம் சாப்பிட்டால் உடனே கட்டுப்படுத்திவிடும்

தேங்காய் துருவலைச் சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய்ப்பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிவிடும். இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது.

ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

செர்ரிப் பழங்கள் வயிற்றுப் பாதிப்புகளை சரி செய்யும் ஆன்டி இன்ஃபிளமெட்ரி பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் வாய்வுக் கோளாறுகள் நீங்குவதோடு சீராக அமிலம் சுரப்பதும் தூண்டப்படுகிறது. இதனால் ஜீரண மண்டலம் வலுப்பெறும்.

மிக எளிதான குறிப்பு இது. வாய்வு உண்டாகும் உணவுகளை சாப்பிட நேர்ந்தால் உடனடியாக வெதுவெதுப்பனா நீரில் பெருங்காயம் ஒரு சிட்டிகை கலந்து குடித்தால் நிச்சயம் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

Rates : 0

Loading…