வெள்ளரி பூசணி ஜூஸ் எப்படி செய்வது

வெள்ளரி பூசணி ஜூஸ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் ஒன்று,
பூசணிக்காய் ஒரு சிறிய துண்டு,
சுரைக்காய் ஒரு சிறிய துண்டு,
இஞ்சி ஒரு சிறிய துண்டு,
சர்க்கரை கால் கப்,
மிளகு சீரகப் பொடி ஒரு சிட்டிகை,
பொடியாக நறுக்கிய புதினா,
கொத்தமல்லித்தழை சிறிதளவு,
எலுமிச்சம்பழம் – 3.


செய்முறை:

வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் மூன்றையும் தோல் சீவி அரைத்து வடிகட்டி சாறெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி, தனியே அரைத்து, வடிகட்டி சாறெடுக்கவும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறெடுக்கவும். அனைத்து சாறுகளையும் ஒன்றாக சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தேவையான நீர் விட்டுக் கலந்து அருந்தவும்.
பலன்: கண்களின் கீழ்வரும் கருவளையத்தைப் போக்கும். ஊளைச்சதையைக் குறைக்கும்.

Rates : 0

Loading…