வேப்பம்பூ பொடி எப்படி செய்வது

வேப்பம்பூ பொடி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வேப்பம்பூ, உளுந்து தலா அரை கப்,
காய்ந்த மிளகாய் – 10,
கடலைப் பருப்பு, துவரம்பருப்பு தலா கால் கப்,
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் உப்பைத் தவிர மற்ற அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடிக்கவும்.
பலன்: வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.

Rates : 0

Loading…