அவசியம் படிக்க புது மாப்பிள்ளை செய்ய வேண்டிய முக்கியமான சில குறிப்புகள்

அவசியம் படிக்க புது மாப்பிள்ளை செய்ய வேண்டிய முக்கியமான சில குறிப்புகள்

நாம் குழந்தையாக பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து ஒரு சிறு பிள்ளை நிலையை அடைகின்றோம். பிறகு நாம் பதின் பருவத்தில் நுழைகின்றோம். இது சற்றே முக்கியமான பருவமாக கருதப்படுகிறது. அடுத்து கிட்டத்தட்ட திருமண வயதை நாம் நெருங்கி விடுவோம். இந்த பருவம் ஒரு ஆணுக்கு தன் துணையை சரியாக தேர்வு செய்ய வேண்டிய பருவமாகும். இதில் இருவரும் மனதளவிலும், உடல் அளவிலும் பக்குவம் பெற வேண்டும்.

அப்போதுதான் திருமணம் என்னும் பந்தம் அதி அற்புதமானதாக கருதப்படும். அந்த வகையில் திருமணத்தின் போது பெண்களை விட ஆண்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சிலவற்றை நாம் இந்த பதிவில் தெரிந்து கொண்டு திருமண நாளன்று பிரகாசமான வாழ்வை தொடங்கலாம்.

வேதி பொருட்களை தவிர்த்தல்… புது மாப்பிள்ளை பார்ப்பதற்கு மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் வேதி பொருட்களால் தயாரித்த அழகு சாதனங்களை பயன்படுத்த கூடாது. மாறாக இயற்கை பொருட்களால் தயாரித்தவற்றையே உபயோகிக்க வேண்டும். அதிக வேதி பொருட்கள் மணமகனின் முகத்தை முற்றிலுமாக கெடுத்து விடும். எனவே மின்னும் பொன்னான முகத்திற்கு இயற்கை சாதனங்களே சிறந்தது.

பளபளப்பாக முகத்தை மாற்ற… திருமண நேரங்களில் வேலை பளு கட்டாயம் அதிகமாகத்தான் இருக்கும். அப்போது உங்கள் முகம் மிகவும் கலை இழந்து தெரிந்தால், இந்த முக பூச்சை செய்து பாருங்கள். இது உங்கள் முகத்திற்கு வெண்மையான பொலிவை தரும்.

தேவையனை :- ஆரஞ்ச் தோல் பால் தேன்

செய்முறை :- முதலில் சிறிது ஆரஞ்ச் பழ தோலை வெயிலில் உலர்த்தி, அரைத்து கொள்ளவும். பின், அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்தால் மங்கலாக இருந்த முகம் பளபளப்பாக மாறும். அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகளையும் இது நீக்கும். புது மாப்பிள்ளையின், கல்யாண கலையும் நிறைவாக வந்து விடும்.

சோப்பு தற்போதைக்கு வேண்டாமே..! பொதுவாகவே சோப்புகள் முகத்தை சொரசொரப்பாக மாற்ற கூடியவை. இவற்றை புது மாப்பிள்ளைகள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது முக ஆரோக்கியத்தை பெரிதும் கெடுக்க கூடியது. எனவே, திருமண நாளுக்கு முன் வாரம் முதல் சோப்புகளை தவிர்த்து விடுங்கள். மாறாக கடலை மாவு குளியல் அல்லது பாலையும் ரோஜா இதழையும் சேர்த்த குளியலை மேற்கொள்ளுங்கள்.

கைகளின் பொலிவிற்கு… நமக்கு பல வகைகளிலும் உதவும் இந்த கைகளை நாம் பராமரிக்க மறந்து விட கூடாது. கைகளின் அழகை மேம்படுத்த சில எளிய வழி முறைகள் இருக்கிறது. எலுமிச்சை சாறு மற்றும் தேனை 1 கப் நீரில் கலந்து அவற்றை கைகளில் துணியால் துடைத்து எடுங்கள். இவ்வாறு திருமணம் ஆவதற்கு ஒரு வாரம் முதல் இதனை செய்து வந்தால் கைகள் பொலிவாகும்.

வெயிலின் தாக்கத்தை ஈடுகட்ட… ஆண்களுக்கு திருமண வேலைகள் தலைக்கு மேல்தான் இருக்கும். அதற்காக வெளியில் செல்ல வேண்டிய வேலைகள் அவர்களுக்கு நிறையவே இருக்கும். அப்போது வெயிலின் தாக்கத்தை கட்டாயம் சரி செய்துதான் ஆக வேண்டும். இதற்கு சுன்ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றை பயன்படுத்தி, முகத்தின் அழகை பாதுகாக்கலாம். இது கரும்புள்ளிகள், பருக்கள் ஏற்படாமல் காக்கும்

பற்கள் அவசியம்… பற்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாததாகும். புது மாப்பிள்ளைக்கு எல்லாமே சரியாக இருந்து பற்கள் நன்றாக இல்லை என்றால் மொத்த அழகையும் சேதப்படுத்தி விடும். பற்களை சுத்தமாக வைத்து கொள்வதும், வெண்மையான பற்களை பார்த்து கொள்வதும் மிக முக்கியமானது.

தாடி மற்றும் மீசைக்கு…! ஆண்களின் முகத்தில் விரைவாகவே தாடி மற்றும் மீசை வளர்ந்து விடும். வேலை அதிகமாக இருக்கிறதென்று இவற்றை கண்டுக்காமல் விட்டுவிடாதீர்கள். மறக்காமல் தாடி மற்றும் மீசையில் உள்ள முடிகளை ட்ரிம் செய்து கச்சிதமாக அழகு செய்து விடுங்கள். மேலும், உங்கள் முகத்திற்கு ஏற்ப மீசை மற்றும் தாடியின் ஸ்டைலை மாற்றியும் கொள்ளுங்கள்.

பாதங்களை அழகாக்க… நம்மை நாம் விரும்புவது போல, இருக்க செய்வது பாதங்கள்தான். திருமண வேளையில் உங்கள் பொன்னான பாதங்களை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள். உங்கள் பாதங்களை மென்மையாக வைத்து கொள்ள 2 டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் 1 முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக அடித்து பாதங்களில் பூசி மசாஜ் செய்யுங்கள். பின் வெண்ணீரில் கழிவி விடுங்கள். இவை பாதத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி மென்மை தரும். இவற்றையெல்லாம் பின்பற்றி அம்சமான புது மாப்பிள்ளையாக கலக்குங்கள் நண்பர்களே…

Rates : 0

Loading…