எள்ளு கொள்ளு கொழுக்கட்டை எப்படிச் செய்வது

எள்ளு கொள்ளு கொழுக்கட்டை எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
கொள்ளு – ஒரு கப்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்),
கறுப்பு எள், இட்லி மிளகாய்ப்பொடி – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கொள்ளை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, வேகவைத்த கொள்ளு, இட்லி மிளகாய்ப்பொடி, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இரண்டு கப் நீருடன் சிறிதளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் கறுப்பு எள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை மோதக சொப்புகளாக செய்து பூரணத்தை உள்ளே வைத்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு இறக்கவும்.

Rates : 0

Loading…