கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை எப்படிச் செய்வது

கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.

மசாலா தயார் செய்ய:
உடைத்த கறுப்பு உளுந்து – அரை கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோம்பு, மிளகுத்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

கறுப்பு உளுந்தை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து, வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தனியாத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றைத் தாளித்து, உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி வெந்த கறுப்பு உளுந்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். மசாலா ரெடி.

இரண்டு கப் நீருடன் எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். அந்த மாவில் விருப்பமான வடிவத்தில் சொப்பு செய்து, உளுந்து மசாலா பூரணத்தை உள்ளே வைத்து மூடி, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Rates : 0

Loading…