கொத்தமல்லி புலாவ் எப்படிச் செய்வது

கொத்தமல்லி புலாவ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

கொத்தமல்லி – ஒரு கட்டு
தக்காளி – மூன்று (நறுக்கியது)
இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு – எட்டு பல்
பச்சை மிளகாய் – ஐந்து
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
பாசுமதி அரிசி – இரண்டு கப்


செய்முறை:

சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அரைத்த விழுதை கழுவிய அரிசியில் போட்டு ஊறவைக்கவும் பதினைந்து நிமிடங்கள்.

பின், குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு, அரைத்த விழுதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

பிறகு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

Rates : 0

Loading…