கோடையில் தினமும் இளநீர் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்

கோடையில் தினமும் இளநீர் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்

சாதாரணமாகவே கோடையில் வெயில் கொளுத்தும். அதிலும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது. இக்காலத்தில் சூரியக்கதிர்கள் அனைவரது உடலில் இருந்தும் ஆற்றல் மற்றும் நீர்ச்சத்தை உறிஞ்சி எடுத்துவிடும். இதனால் பலருக்கும் எந்நேரமும் தாகம் எடுக்கும்.

ஆகவே பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட பானங்களை வாங்கி பருகுவார்கள். ஆனால் அப்படி கார்போனேட்டட் பானங்களை குடிப்பதற்கு பதிலாக, இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரை குடிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்

ஏனெனில் மற்ற பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் ஜூஸ்களை விட, பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது தான் இளநீர். மேலும் இது மிகவும் இனிப்பாகவும், அற்புதமான சுவையிலும் இருக்கும்.

இத்தகைய இளநீரை தினமும் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உடல் வறட்சியைத் தடுக்கும்

இளநீரில் எலக்ரோலைட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக பராமரித்து, அதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

சிறந்த எனர்ஜி பானம்

கார்போனேட்டட் பானங்களை தேடி வாங்கி குடிப்பதற்கு பதிலாக, இளநீரை வாங்கிக் குடித்தால், உடலின் ஆற்றல் ஊக்குவிக்கப்படுவதோடு, உடனடி எனர்ஜியையும் பெறலாம். மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், நாள் முழுவதும் வேண்டிய ஆற்றலை இது வழங்கும்.

இதயத்திற்கு நல்லது

இளநீரில் கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை தினமும் குடித்து வந்தால், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

சிறுநீரக கற்களைத் தடுக்கும்

இளநீரில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அமிகம் உள்ளதால், இது மிகவும் சக்தி வாய்ந்த டையூரிக் ஏஜென்ட்டாக செயல்பட்டு, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். அதுமட்டுமின்றி, இளநீரை தினமும் குடித்து வந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகள் இளநீரை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் இளநீர் தாகத்தை தணிப்பதோடு, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

உடல் வெப்பம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்ட நிலையில், சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, அதனால் கடுமையான வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றை சந்திக்கக்கூம். ஆனால் தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, அதனால் எவ்வித பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும

் முக்கியமாக தினமும் இளநீர் குடித்து வந்தால், அதிலும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதனால் நோய்களின் தாக்கம் குறையும்.

Rates : 0

Loading…