கோஸ் பரோத்தா செய்வது எப்படி

கோஸ் பரோத்தா செய்வது எப்படி


தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு – 1 1/2 கப்
துருவின முட்டைக்கோஸ்- 1 கப்
பச்சைமிளகாய் – 1
வெங்காயம் – 1
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகாய் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி


செய்முறை :

* கோதுமை மாவைச் சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

* ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப,மிளகாயை போட்டு வதக்கிய பின் கோஸ் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மிளகாய்பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஈரம் ஓரளவிற்குப் போக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.

* மாவை சிறிது எடுத்து அதன் நடுவில் கோஸ் கலவை சிறிது வைத்து பரோத்தாக்களாக இடவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள பரோத்தாவை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

* தால், குருமா, இதற்கு இணை உணவுகள்.

Rates : 0

Loading…